குழந்தை பெற மட்டும் திருமணம்!

0

ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பாலிவுட்டில் அவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெறவே இப்போது பாலிவுட்டே கதி என கிடக்கிறார்.

வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரை டாப்சி காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. டாப்சி அதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில், தான் எதற்காக திருமணம் செய்வேன் என டாப்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வரும்போது திருமணம் செய்து கொள்வேன். குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர வேறு எதற்காகவும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்“ என துணிச்சலான கூறியிருக்கிறார் டாப்சி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here