இனி குடிக்க மாட்டேன்- லாரன்ஸ் சபதம்!

அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் அன்னை தெரசாவின் 108வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மனித நேய பணி செய்கிறவர்களுக்கு அன்னை தெரசா விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விருது நடிகர் ராகவா லாரன்சுக்கு வழங்கப்பட்டது. ராகவா லாரன்ஸ் தனது தாயுடன் விருதை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: இந்த உலகத்தில் உள்ள கடவுள்களில் முதல் கடவுளாக நான் நினைப்பது தாயைத் தான். அதனால் இந்த விருதை என் அம்மாவுக்கு காணிக்கையாக்குகிறேன். ராயபுரத்திலிருந்து கோடம்பாக்கத்துக்கு நானும், அம்மா மூன்று சகோதரிகளும் வந்து வறுமையை எப்படியெல்லாம் அனுபவித்தோம் என்பது சொல்லி மாளாது.

அதனால் பொறுமையாக வளர்ந்து நான் சம்பாதிப்பதை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுக்கிறேன். சாதாரணமாக இருந்த என்னை இந்தளவுக்கு உயர்த்திய மக்கள் கொடுத்த பணத்தை நான் திருப்பி தருகிறேன் அவ்வளவு தான்.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு எனக்கு சிகரெட், மது என்று எந்த பழக்கமும் இல்லை. டான்ஸரான போது நண்பர்களின் வேண்டுகோளுக்காக எப்போதாவது குடிப்பேன். அதையும் நிறுத்தியாச்சி. ரொம்ப டென்சன் இருந்தா எப்போதாவது கொஞ்சம் ஒயின் அருந்துவேன். இப்போது இந்த அன்னை தெரசா விருது பெற்றதன் மூலம் அந்த விருதுக்கு மரியாதை கொடுக்க இனி ஒயின் கூட குடிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். இவ்வாறு ராகவா லாரன்ஸ் பேசினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here