எஸ்எம்எஸ் அனுப்பியே கவிழ்த்தார்: பிரியங்கா- ஜோன்ஸ் காதல் கதை!

‘காதல் கோட்டை’ படத்தில் அஜீத், தேவயானி இருவரும் போனில் பேசியே காதல் ஜோடிகளாவார்கள். அந்தபாணியில் நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸும் காதல் ஜோடிகளான சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. திரையுலகில் பிரபலமானவர் பிரியங்கா சோப்ரா, இசையுலகில் பிரபலமானவர் நிக் ஜோனஸ். சில வருடங்களுக்கு முன் பொது நண்பர் மூலமாக இருவரும் அறிமுகமானார்கள். பின்னர் இருவரும் தங்கள் வேலையில் மும்முரமாகி விட்டனர்.

நிக் ஜோனஸ் அடிக்கடி செல்போனில் பிரியங்காவுக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். பிரியங்காவும் அதற்கு பதில் அளித்து வந்தார். 6 மாதத்துக்கு முன்பு நிக், பிரியங்கா சோப்ரா நேரில் சந்தித்துக் கொண்டனர். அதன்பிறகு இவர்களின் நட்பு தீவிரமானது. அடிக்கடி சந்திக்கத் தொடங்கியவர்கள் பல்வேறு இடங்களுக்கு டேட்டிங் சென்றனர். இருவரும் ஜோடிபோட்டு நடமாடியதால் காதல் கிசுகிசுக்கள் பரவியது.

ஒரு சந்தர்ப்பத்தில் கிசுகிசுவை சாக்காக வைத்து இருவரும் காதலித்து பார்க்கலாமே என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பிறகு ரொமன்ஸ் மூடுக்கு மாறியவர்கள் தங்களது நட்பை அடுத்த கட்டத்துக்கு அதாவது காதல் தளத்துக்கு கொண்டு சென்றனர். இருமனமும் ஒன்றிணைந்ததையடுத்து நிக், பிரியங்கா இருவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இருவரும் திருமண உறவில் இணைகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here