9 கோடியை திருப்பி கொடுப்பாரா வடிவேலு?

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட படம் இம்சை அரசன் 24-ம் புலிகேசி. இம்சைஅரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான இப்படம் தொடங்கப்பட்ட நாள் முதலே பஞ்சாயத்து தான்.

சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே, வடிவேலு, சிம்புதேவன் இடையே முட்டல், மோதல் ஏற்பட படப்பிடிப்பு தடைப்பட்டது.

வடிவேலுவுக்குக் கொடுத்த அட்வான்ஸ், மற்றும் படத்துக்கு செலவழித்த தொகையையும் சேர்த்து 9 கோடி ரூபாயை வடிவேலு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார், தயாரிப்பாளரான இயக்குநர் ஷங்கர். இதுகுறித்து பலமுறை தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியும், வடிவேலு பதில் அளிக்கவில்லை.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தின் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க வேண்டும் அல்லது 9 கோடியை ஷங்கருக்கு திருப்பிக் கொடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டும். அதுவரை, வடிவேலுவை வைத்து எந்த ஒரு தயாரிப்பாளரும் படம் பண்ண வேண்டாம் என்று சங்க உறுப்பினர்களிடம், தயாரிப்பாளர் சங்கம்  அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here