அதர்வா ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்!

0

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் ப்ரியா பவானி சங்கர். மேயாதமான் படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். தற்போது அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் ராதராவி, ராதிகா, ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். டி.முருகானந்தம், ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார்கள்.

8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு கேங்ஸ்டர் கதை. ஆனாலும் வழக்கமான கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அதர்வா கேரக்டர் இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

பிரியா பவானி சங்கர் ஸ்கூல் டீச்சராக நடிக்கிறார். ராதிகா, ரதாரவி காமினேஷன் படத்தில் பெரிய அளவில் பேசப்படுவதாக இருக்கும், இருவருமே கதை கேட்ட உடன் நடிக்க ஒப்புக் கொண்டார்கள். மதுரை பின்னணியில்  நடக்கும் கதை. அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்கிறார் ஸ்ரீ கணேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here