இளம்பெண்ணை அடித்து உதைந்த வாலிபன் கைது!

டில்லியில், ஒரு இளம் பெண்ணை, இளைஞர் ஒருவர், கண்மூடித்தனமாக அடித்து உதைக்கும் காட்சிகள், சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் வேகமாக பரவின.

இந்த வீடியோவை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங்கும் பார்த்தார். இதையடுத்து, அந்த இளைஞரை கைது செய்ய, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்னாயக்கிற்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையில், டில்லி, துணை கமிஷனர் ஆன்டோ அல்போன்ஸாவிடம், இளம்பெண் ஒருவர் கொடுத்த புகார் மனுவில், ‘என் நண்பரான தோமர், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; என்னை சரமாரியாக தாக்கினார்’ என, கூறியிருந்தார்.

இதையடுத்து, டில்லி போலீசார், தோமர் மீது வழக்குப் பதிவு செய்து, தோமரை, நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள தோமர், டில்லி போலீஸ் கான்ஸ்டபிள் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here