திலீபனிற்கு மலரஞ்சலி செலுத்தி சுமந்திரன் ஆற்றிய உரை!

தமிழர்களின் வரலாற்றில் முப்படைகளையும் கொண்ட பெரிய இராணுவ கட்டமைப்பை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தனர். இந்த காலகட்டத்தில் பெரும் இராணுவ வெற்றிகளையும் ஈட்டினார்கள். உலகமே திரும்பிப் பார்க்கும் இராணுவ வெற்றிகளை ஈட்டினார்கள்.

இதேபோல தியாகி திலீபன் விடுதலைப் போராட்டத்தில் இன்னொரு பரிமாணத்தை ஏற்படுத்தினார். ஆயுதப் போராட்டத்தில் எப்படியான உச்சத்தை தொட்டார்களோ, அதேபோல அகிம்சை போரின் உச்சத்தையும் புலிகள் தொட்டிருந்தார்கள். அதை திலீபன் நிகழ்த்தி காட்டியிருந்தார்“ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபனின் 31வது நினைவுநாள் நினைவேந்தலின் தொடக்கநாள் அஞ்சலி நிகழ்வுகள் இன்று கரவெட்டி பிரதேசசபை மண்டபத்தில் இடம்பெற்றது. திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்துதூவி அஞ்சலித்த பின்னர், உரையாற்றிய போதே இதை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்வதையும் பொருத்தமாக இருக்கும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வு முயற்சியை செய்யும்போது, எமது அரசியலுக்கு மாற்று அரசியல் செய்யப் போவதாக சிலர் கூறுகிறார்கள்.

எம்மை நிராகரித்து, மாற்று அரசியல் சக்தியாகப் போகிறார்கள் என்றால் எப்படி செயற்பட போகிறார்கள்? விடுதலைப் புலிகளை போல ஆயுதம் தூக்கி போராட போகிறார்களா? அல்லது திலீபனை போல உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தயாராக இருக்கிறார்களா?. அவர்களின் மாற்று அரசியல் எது?“ என கேள்வியெழுப்பினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here