திலீபன் நினைவேந்தலில் பங்குப் போட்டி: நினைவுத்தூபியில் ரகளை… கைகலப்பு!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைய ஆரம்ப நிகழ்வில் திலீபனின் தூபிக்கு முன்பாக இன்று அரசியல் கட்சிகள் நேரடி மோதலில் ஈடுபட்டனர். ஜனநாயக போராளிகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேரடியாக கைகலப்பில் ஈடுபட்டனர்.

1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த சமயத்தில், ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். பன்னிரண்டு நாள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்திருந்தார்.

ஈழத்தமிழர் வரலாற்றில் மாபெரும் தியாகங்களில் ஒன்றான திலீபனின் 31வது நினைவேந்தல் இன்று ஆரம்பித்தது.

திலீபனை யார் உரிமைகோருவது என்ற போட்டி தமிழ் அரசியல் கட்சிகளிற்கிடையே அண்மைக்காலமாக அதிகரித்திருந்தது. ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளை  ஏற்பாடு செய்திருந்தனர்.

திலீபன் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே, ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இது கைலப்பு வரை சென்றது.

கூட்டத்தில் அஞ்சலி செலுத்திய அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திடம் ஊடகவியலாளர் சிலர் பேட்டி காண முயன்றனர். அவர்களிடம் அவைத் தலைவர் பேச முயன்ற போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆட்சேபம் தெரிவித்தனர். யாரும் உரையாற்ற முடியாதென முன்னணியினர் குரலெழுப்பினர்.

உடனே ஜனநாயக போராளிகள் கட்சியினரும் அதில் தலையிட்டு, முன்னணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கைகலப்பு வரை சென்றது. 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here