சிவாஜிலிங்கம் இவ்வளவு பெரிய பயங்கரவாதியா?

இந்தியாவிற்குள் நுழைவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை இந்தியா பயணமாகும் வடமாகாணசபை உறுப்பினர்களை கொண்ட அணியில் சிவாஜிலிங்கம் பயணமாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அபிவிருத்தி தொடர்பாக இந்தியாவின் ஹைதராபாத் நகரத்தில் வடமாகாணசபை உறுப்பினர்கள், அதிகாரிகளிற்கு பயிற்சி பட்டறையை ஆசியா பவுண்டேசன் நிறுவனம் நடத்தி வருகிறது. முதற்கட்டமாக ஒரு அணி பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டிருந்தது.

நாளை இரண்டாம் கட்ட அணி புறப்படவிருக்கிறது. இதில் சிவாஜிலிங்கமும் இடம்பெற்றிருந்தார். எனினும், அவருக்கு இந்தியாவிற்குள் நுழைவதற்கான விசாவை வழங்க மறுத்துவிட்டது கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here