மகனை அடித்து துவைத்த தந்தை விளக்கமறியலில்!

பாடசாலை வாயிலில் வைத்து மகனை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.

தந்தை கடுமையாக தாக்குவதால் வீட்டிலிருக்க பயந்த மாணவன், வேறொரு இடத்தில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார். மகன் வீட்டிற்கு வராததையடுத்து, அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல பாடசாலை வாயிலில் தந்தை காத்திருக்கிறார்.

பாடசாலை முடிந்து மகன் வெளியில் வந்தபோது, வீட்டுக்கு வருமாறு தந்தை கேட்டுள்ளார். ஆனால் மகன் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தந்தை, பாடசாலை வாயிலில் வைத்து மகனை தாக்கியுள்ளார். இதனை அவதானித்த பாடசாலை அதிபர், தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார். அதிபரை கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு, தந்தை சென்றவிட்டார்.

இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. உடனடியாக பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவர் பல வழக்குகளுடன் தொடர்புபட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்று பொலிசார் தெரிவித்தனர். கடந்த உள்ளூராட்சி தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் ஒருவரையும் இவர் நையப்புடைத்திருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here