மூதாட்டியிடம் பணத்தை ஆட்டையை போட்ட யாழ் பிரபலம் விளக்கமறியலில்!

வயதான மூதாட்டியொருவரிடம் பணத்தை ஆட்டையை போட்ட குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைதாகியுள்ளார். கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட மு.தம்பிராசா என்பவரே கைதாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வங்கியொன்றில் கணக்கை வைத்துள்ள மூதாட்டியொருவர், பணத்தை மீளப்பெறுவதற்கு மேற்படி நபரின் உதவியை நாடியுள்ளார். வங்கியிருந்து பணத்தை எடுத்து தருவதாக கூறி, பணத்தை பெற்ற மு.தம்பிராசா, பணத்தை மூதாட்டிக்கு பணத்தை வழங்காமல் சென்றுவிட்டார்.

இதையடுத்து மூதாட்டி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், வங்கியின் சிசிரிவி கமராவை ஆராய்ந்ததில், பணத்தை வழங்காமல் சென்றது மு.தம்பிராசா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here