பிக் பாஸ் பைனல்ஸ் வாரத்துக்கு செல்வது இவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வென்று யாஷிகா நேரடியாக இறுதி வாரத்துக்கு முன்னேறியுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த வாரம் ’டிக்கெட் டூ ஃபினாலே’ என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் தண்ணீர் நிரம்பிய கோப்பையை கையில் ஏந்தி ஒருவர் பின் ஒருவர் சுற்றி வர வேண்டும். கோப்பையில் எவ்வளவு தண்ணீர் மிஞ்சுகிறதோ அதை பொறுத்து போட்டியாளர் நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வார் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

இந்த டாஸ்க் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களின் முன்னிலையில் நடைபெறுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும்7 போட்டியாளர்களில், மும்தாஜ், ரித்விகா, ஐஸ்வர்யா, பாலாஜி மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் வெளியேறினர்.

இன்றைய நிகழ்ச்சி தொடர்பான புரொமோ வீடியோவில் இறுதியாக தண்ணீர் கோப்பையுடன் சுற்றி வரும் யாஷிகா, ஜனனி, விஜி ஆகிய மூவரில் விஜி வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஜனனி மற்றும் யாஷிகா இடையேயான போட்டியில் யாஷிகா கையில் இருக்கும் கோப்பையில் அதிக தண்ணீர் இருப்பதால் அவர் தான் இறுதி வாரத்துக்கு தகுதி பெறுவதாக தெரிகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் மிகவும் புரொக்ரசிவ் போட்டியாளராக, இது தான் கேம் என்பதை உணர்ந்து கச்சிதமாக விளையாடி வருபவர் யாஷிகா. வயதில் சிறியவராக இருந்தாலும், அவரது கருத்துக்களும், அவரது மனதிடமும் மற்ற போட்டியாளர்களை விட அதிகம் என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இறுதி வாரத்துக்கு தகுதியான யாஷிகா பிக் பாஸ் டைட்டிலை தட்டிச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here