கை,கால் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு?: மன்னார் சதொச வளாக அகழ்வில் அதிர்ச்சி!

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்றும் நடைபெற்று வருகின்றது.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன.

நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டது.

கைகள் மற்றும் கால்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டதை போல, எலும்புக்கூட்டின் தோற்றம் இருந்தது. அத்துடன் குறுகிய அகலமுள்ள குழியிலேயே அவை புதைக்கப்பட்டிருந்தன.

குறித்த மனித எலும்புக்கூடு கைதியாக வைக்க்பட்டு கை ,கால்கள் கட்டப்பட்ட நிலையையில் புதைக்கப்படதா அல்லது ஏதேனும் மத சடங்குகளிற்காக அப்படி வைக்கப்பட்டதா என்பதை தற்போதைக்கு உறுதிப்படுத்த முடியாதென ஆய்வுப்பணியிலுள்ள முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை(14) 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, பொதி செய்யப்பட்டு, நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here