பொன்சேகா மீது கடும் விமர்சனம்: பதவி விலகுமாறும் வலியுறுத்தல்!

நேற்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் அமைச்சர் சரத்பொன்சேகா தொடர்பாக ஜனாதிபதியினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொன்சேகா நாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாகவும் மற்றும் இராணுவத்தளபதி உள்ளிட்ட இராணுவத்தினர் தொடர்பாகவும் முன்வைக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவெனவும் அமைச்சராக இருந்துக்கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை ஏற்க முடியாது எனவும் ஜனாதிபதி கடும்தொனியில் விமர்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொன்சேகா தொடர்பானஜனாதிபதியின் விமர்சனங்களை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தவர்கள் அங்கீகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பொன்சேகாவை பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் பொன்சேகா கலந்துக்கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here