நாடுகடந்த தமிழீழ அரசாங்க அரசவையில் கொசோவோ, ஆர்மேனிய உயர்தலைவர்கள்!

ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கொசோவா நாட்டு துணை அதிபர் Haki Abazi, ஆர்மேனிய அரசவைத் துணைத்தவைர் Van Krikorianஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறப்பு அரசவைக் கூட்டம் எதிர்வரும் டிசெம்பர் 5ம்,6ம் தேதிகளில் கூட இருக்கின்றது. மாதம் தோறும் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக கூடுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையாளது, வருடத்தில் இரு தடவைகள் நேரடி அரசவை அமர்வுகளை கொண்டதாகவுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் பெருற்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை மேற்கொள்ள முடியாத நிலையில், இணையவழி சிறப்பு அரசவை அமர்வு இடம்பெறுகின்றது.

கொசோவா நாட்டு துணை அதிபர்

இந்நிகழ்வில் தொடக்க நாள் நிகழ்வில் இணையவழி காணொளி மூலமாக ஈழத்தமிழர்களின் நீதிக்கும், அரசியல் இறைக்குமான போராட்டத்துக்கு தமது தோழமையினை இவர்கள் தெரிவிக்க இருக்கின்றனர்.

‘இந்தியப் பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில் தமிழர்களை ஒரு தரப்பாக மாற்றுதல்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற இருக்கின்ற இந்த அமர்வுகளின் போது அமைச்சுக்களின் அறிக்கை, அரசவை உறுப்பினர்கள் உரைகள், கேள்வி பதில், தீர்மானங்கள் என பல்வேறு விடயங்காக இடம்பெற இருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here