சர்வதேச அறிமுகத்தை பெற்றார் யாழ் வீரன் வியாஸ்காந்த்!

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகத்தை பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வியாஸ்காந்த் விஜயகாந்த்.

யாழ் மத்திய கல்லூரியின் வீரரான வியாஸ்காந்த், இன்று யப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஆடும் பதினொருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

லங்கா பிரீமியர் லீக்கில் யப்னா ஸ்டாலியன்ஸிற்காக தெரிவான வியாஸ்காந்த், அந்த அணி ஆடிய முதல் 4 ஆட்டங்களிலும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் தமிழ் இரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியடைந்த நிலையில் காணப்பட்டனர். இந்த நிலையில், கொழும்பு கிங்ஸ் அணியுடனான இன்றைய போட்டியில் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

சுழற்பந்துவீச்சாளரான விஜாஸ்காந்த் இன்று ஆட்டமிழக்காமல் 3 ஓட்டங்களை பெற்றார்.

முதலில் ஆடிய யப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை பெற்றுள்ளது. பதிலளித்து ஆடி வரும் கொழும்பு கிங்ஸ் அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 63 ஓட்டங்களை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here