பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் பகுதியில், பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
நாளை- டிசம்பர் 5 ஆம் திகதி முதல் காலை 9 மணி முதல் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.
பயணிகளுடன் ஒரு பார்வையாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்று விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகளுடன் வருபவர் முகக்கவசம் அணிவதோடு, மேலதிகமாக விமான நிலையத்தில்ல் செயல்படுத்தப்படும் சுகாதார நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.