செம்பருத்தி தொடரிலிருந்து விலகினாரா கார்த்திக்? -உண்மையை கேட்ட ஊடகத்திற்கு கிடைத்த பதில்!

ஜீ-தமிழின் ‘செம்பருத்தி’ தொடரில் நடித்து வரும் கார்த்திக், சமீபத்தில் ஜீ- தமிழ் சேனலின் ஓடிடி தளமான ஜீ 5 தயாரித்த ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வந்தார்.

தற்போது குறித்த செம்பருத்தி நீரியல் 800 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது செம்பருத்தி.

சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இத்தொடரிலிருந்து ஹீரோ கார்த்திக் வெளியேறி விட்டதாக கடந்த சில தினங்களாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

‘செம்பருத்தி’ தொடரில் நடித்து வரும் அதே வேளையில் சமீபத்தில் ஜீ தமிழ் சேனலின் ஓடிடி தளமான ஜீ 5 தயாரித்த ‘முகிலன்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்து வந்தார் கார்த்திக்.

‘கார்த்திக் தானாகவே வெலியேறுவதாக அறிவித்து விட்டுச் சென்று விட்டார். மாற்று ஹீரோ கமிட் செய்து விட்டு சேனல் முறைப்படி அறிவிக்கும்’ என்கிறார்கள்.

வேறு சிலரோ ”சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கப்பட்டு விட்டார். சீரியல் நல்லபடியாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் கார்த்திக்கின் இந்த திடீர் நீக்கத்துக்கான காரணம் குறித்து உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை’ என்று சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

எனினும் இந்த தகவல் என்னும் உறுதியாகவில்லை. இந்தியாவின் பிரபல ஊடகமான விகடன் கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக் அழைப்பை எடுக்கவில்லை என்றும்,  குறித்த ஊடகம் ஜீ தமிழ் சனலை தொடர்பு கொண்டு கேட்ட போது  தாங்கள்  இதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை’ என அவர்கள் விளக்கம் கூற மறுத்துவிட்டதாகவும் விகடன் தகவல் வெளியிட்டிருக்கிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here