கஞ்சா வளர்க்க விரைவில் அனுமதி!

0

ஆயுர்வேத மருந்து உற்பத்தக்கு தேவையான கஞ்சாவை பயிரிடுவதற்காக அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் இது தொடர்பாக எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கனடா , பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடை தற்போது மருந்து உற்பத்திகளுக்காக நீக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் கஞ்சாவுக்கு தடை காணப்படுகின்றது.

அதனை புகையாக உறிவதே பிரச்சினையாக இருக்கின்றது. ஆனால் மருந்தாக பயன்படுத்துவதில் பிரச்சினையில்லையெனவும் அமைச்சர் அதன்போது தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here