27 ஆண்டுகள் உறைநிலையில் சேகரித்து வைக்கப்பட்ட கருவை பயன்படுத்தி குழந்தை பெற்ற தம்பதிகள்

அமெரிக்காவில் பயன்படுத்தப்படாத மனித கருக்கல் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறதாம்.

இவ்வாறு உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் 27 ஆண்டுகள் பழமையான கருக்களை பயன்படுத்தி குழந்தை பெறு இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை கிடைக்க செய்துள்ளனர் அங்குள்ள வைத்திய நிபுணர்கள்.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா- பென் கிப்சன் தம்பதிகளுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை.

இந்நிலையில் இவர்கள்- கரு தத்தெடுப்பு தொடர்பில் உள்ளூர் செய்தி சனல் ஒன்றின் மூலம் தெரிந்து கொண்டார்கள்.

அதைத் தொடர்ந்து இவர்கள் கரு தத்தெடுப்புக்காக அங்குள்ள தேசிய கரு தான மையத்தை நாடினார்கள். அங்கு பயன்படுத்தப்படாத கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் இப்படி பயன்படுத்தப்படாத 10 லட்சம் கருக்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளதாம். இந்த தம்பதியர் 2017 ஆம் ஆண்டு அங்கு பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு கருவை தானம் பெற்று அதன் மூலம் எம்மா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 3.

இந்தநிலையில் மறுபடியும் கரு தானம் பெற்றனர். இந்த கரு 27 ஆண்டுகளுக்கு முன்பாக உருவாக்கப்பட்டதாம். இதன்மூலம் கடந்த ஒக்டோபர் மாதம் பென் கிப்சன் மற்றொரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்தக் குழந்தைக்கு அவரும் அவரது கணவர் டினாவும் சேர்ந்து மோலி கிப்சன் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

அமெரிக்காவில் மிக நீண்டகாலம் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இதுபற்றி பென் கிப்சன் கூறும்போது, ‘நாங்கள் நிலாவுக்கு மேலே இருப்பது போல மகிழ்கிறோம். இப்போது எங்களுக்கு ஒரு மகள் அல்ல, 2 மகள்கள்’ என்று குறிப்பிட்டார்.

பென் கிப்சன் ஒரு ஆசிரியை. இவரது கணவர் டினா சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here