கல்முனை உப பிரதேச செயலகத்தின் கணக்காளர் நியமனம் இரத்து: அரசிலுள்ள கருணாவை விட, எதிரணியிலுள்ள ஹாரீஸ் செல்வாக்கானவரா?

கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளரை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை பிரதேச முஸ்லிம் அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது. இந்த விவகாரத்தை வைத்து, கடந்த ஆட்சியில் இந்தா, அந்தா என கூட்டமைப்பினரின் தலையில் ரணில் விக்கிரமசிங்க நன்றாக மிளகாய் அரைத்தார்.

நாளை நியமனம், கணக்காளர் வந்து விட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் ஆட்சியில் பங்குதாரராக இருந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஹாரிஸ் எம்.பி அதை தடுத்து வந்தார். அவரை மீறி கூட்டமைப்பினரால் எதுவும் செய்ய முடியவில்லை.

இறுதியில் கணக்காளர் பதவி நிலையொன்று உருவாக்கப்பட்டதுடன், அந்த ஆட்சிக்காலம் முடிந்தது.

இந்த நிலையில், பெரமுன ஆட்சியில் கல்முனையை தரமுயர்த்துவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் தொடர்ந்து கூறி வந்தார். அவரது முயற்சியை தொடர்ந்து, கணக்காளரை நியமிக்கும் நடவடிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டிருந்தது.

இதன்படி, இன்று (4) கணக்காளரை நியமிக்கும் உத்தியோகபூர்வ கடிதம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு வந்திருந்தது. எனினும், நேற்று அவசர அவசரமாக அம்பாறை அரச அதிபரிடமிருந்து அனுப்பப்பட்ட தொலைநகலில், இன்று நடைபெறவிருந்த நியமனத்தை நிறுத்தும்படி அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகிறது.

இதனால், கல்முனை விவகாரம் மீண்டும் இழுபறியாகியுள்ளது.

இம்முறை தடங்கலிற்கும் ஹாரீஸின் தலையீடுதான் காரணமென அம்பாறை தமிழ் அரசியல் பிரதிநிதிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here