வவுனியா பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; அலுவலகத்தில் கிருமித் தொற்று நீக்கும்

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று கிருமித் தொற்று நீங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவரின் உறவினருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்விதமான அபாயகரமான நிலையும் பிரதேச செயலகத்திற்குள் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அச்சமடைய தேவையில்லை என்று பிரதேச செயலாளர் ந. கமலதாசன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவருகையில்,

இன்று(04) வவுனியா பிரதேச செயலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பல்வேறு சேவைகளை மேற்கொள்ளச் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதுடன் ஏதோ அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததையும் உத்தியோகத்தர்களிடையே பரபரப்பும் ஏற்பட்டிருந்தது. இவ்விடயம் குறித்து பிரதேச செயலாளருடன் தொடர்புகொண்டு வினவியபோது,

பிரதேச செலயத்தில் பணியாற்றும் உத்தியோகத்தரின் ஒருவரின் உறவினருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த உத்தியோகத்தர் பணியாற்றும் பிரதேச செயலகத்தின் அலுவலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நாளைய தினம் கிடைக்கவுள்ளது. இது குறித்து பொதுமக்கள் உத்தியோகத்தர்கள் அச்சமடையத் தேவயில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பிரதேச செயலகத்திற்கு கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் வழமையாக இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here