ஹொரனவிலிருந்து புனாணை கோவிட் 19 சிறப்பு சிகிச்சை மையத்திற்கு 23 கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற பஸ் இன்று (04) காலை விபத்திற்குள்ளானது.
கல்முனையில் இருந்து கதுருவெல செல்லும் தனியார் பஸ்சும், கொரோனா நோயாளிகளின் பஸ்சும் வெலிகந்த, அசேலபுர பகுதியில் விபத்திற்குள்ளாகின.
கொரோனா நோயாளிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியும், நடத்துனரும் விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக பொலன்னருவ பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா நோயாளர்கள் இருவரும் காயமடைந்தனர்.
வேறொரு பேருந்தின் மூலம் கொரோனா தொற்றாளர்கள் புனாணைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.