தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி பயங்கரவாதத்தின் அரசியல் பிரிவு. அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அனுதாபம், இன்று நில அதிர்வாக மாறியுள்ளது. அன்று ஜேர்மனியில் ஹிட்லர் அழிக்கப்பட்டதும், அவரது நாசி அரசியல் கட்சி முற்றாக அழிவடைந்தது.
உலகின் மிக பெரிய பயங்கரமான பயங்கரவாத அமைப்பை தோற்கடித்த பின்னர், அவர்களின் அரசியல் பிரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடைசெய்யாததால் அவர்கள் இன்று இத்தகையை கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
அவர்களை தடை செய்யாதது நாம் செய்த தவறு. அந்த தறை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, இத்தகையை கருத்துக்களை வெளியிடுவார்களாயின், அவர்கள் இந்த பாராளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க எவ்வித காரணமும் இல்லையென நான் கூறுகின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரபாகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்ய முன்னர் பிரபாகரனின் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர் என தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார, தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்படும் கட்சி. நீங்கள் பிள்ளையான், கருணா அம்மான் போன்றவர்களை மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டு கூட்டமைப்பை தடைசெய்ய கேட்கிறீர்கள். உண்மையான கொலையாளிகள், தாக்குதலாளிகள், பயங்கரவாதிகளை சட்டை பைக்குள் வைத்துக் கொண்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற ஜனநாயக அமைப்பொன்றை தடைசெய்ய கோருவதை நாம் எதிர்க்கிறோம் என்றார்.