நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவாகியது. இதன்மூலம், மொத்த மரணங்கள் 129 ஆக உயர்ந்துள்ளது.
மணித்தவர்களில் 89, 85, 71, 78 வயதுடைய நான்கு ஆண்களும், 56 வயதுடைய ஒரு பெண்ணும் உள்ளனர்.
கொலன்னாவ,கொழும்பை சேர்ந்தவர்களே மரணித்தனர். நால்வர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மரணித்தனர். 71 வயதான ஆண் அவரது இல்லத்தில் மரணித்தார்.
பாதிக்கப்பட்ட அனைவருமே கோவிட் -19 நோய்த்தொற்றைத் தவிர நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.