கொலை கலாச்சாரம் தோன்றுவதை எந்த வகையிலும் நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து தனது கருத்துக்களை இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்,
அமைதியின்மை குறித்து பல அமைச்சர்கள் தவறான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். அமைதியின்மைக்கான உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்பது அனைவரின் பொறுப்பாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறைக்குள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்திருந்ததால் பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கைதிகள் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 120 கைதிகளை மகரவிற்கு கொண்டு செல்லப்பட்டதாலேயே தொற்றாளர்கள் அதிகரித்ததாக தெரிவித்தா்.
எனவே பல்வேறு காரணங்களை கூறி சம்பவத்தை விளக்கும் முயற்சிகளை கைவிட்டு, அதற்கு பதிலாக விஷயத்தின் அடிப்பகுதிக்கு வருமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்கு அரச தரப்பின் பிரதம கெரடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஆட்சியில் இருக்கும்போது குறைந்தபட்சம் ஒரு சிறைச்சாலையாவது கட்டத் தவறிவிட்டு, இப்பொழுது எதிர்வரிசையிலிருந்து கைதிகளின் உரிமைகளைப் பற்றி பேசுவதாகக் கூறினார்.
அமைச்சர் தானே சிறையில் இருந்ததாகவும், அவரது செல்லில் 51 கைதிகள் இரு்ததாகவும், தூங்குவதற்கு இடமில்லாமல் இருந்ததாகவும் கூறினார்.
கேகாலை சிறையில் சிறிய ஒரு பகுதிக்குள் 225 கைதிகள் அடக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
மகர சிறைச்சாலை சம்பவத்தை தற்போதைய அரசாங்கம் கவனித்து வருவதாகவும், தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், ஒரு பாடசாலை கட்டப்படும்போது 1,000 சிறைகள் மூடப்படும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டார். அதனால் சிறைச்சாலைகளுக்கு பதிலாக முன்னாள் அரசு அதிக பாடசாலைகளை கட்டியதாக குறிப்பிட்டார்.