அம்பாறையில் பலத்தமழை, காற்று!

அம்பாறை மாவட்டம் கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை பெய்து வருவதுடன் பலத்த காற்றும் வீசி வருகின்றது.

இதனால் தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக ஏற்கனவே பாதிப்புள்ளாகியிருக்கும் மக்கள் பலத்த மழையினால் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே வேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் வௌ்ளிக்கிழமை வரையான மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள புயல் காற்று உருவாகுவதற்கான சிகப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் மாகாண மக்களுக்கு ஏற்படும் அபாயத்தை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here