மாவீரர்தின அஞ்சலி தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக குற்றம்சாட்டி கைதான ஊடகவியலாளர் கோகிலதாசனை விளக்கமறியலில் வைக்க வாழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுயாதீன ஊடகவியலாளர் கோகிலதாசன் கடந்த 28ஆம் திகதி வாழைச்சேனை பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
மாவீரர்தின அஞசலி தொடர்பில் முகப்புத்தகத்தில் பதிவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 3 நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட இவர், இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, வாழைச்சேனை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கல்முனை சிறைச்சாலைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார்.
இன்று ஊடகவியலாளரை பார்வையிட, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நேற்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவரை பார்வையிட்டிருந்தார்.