மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தில் இலங்கை விமானப்படை முகாம் கட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
பல விடயங்களை கருத்தில் எடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
விமான நிலையத்தில் ஓடுபாதையை விமானப்படை பயன்படுத்திக்கொள்ளவும், விமான நிலையத்திற்கு விமானப்படை பாதுகாப்பை வழங்க முடியும் என்பதால் இரு தரப்பினரும் இந்த நடவடிக்கையால் பயனடைவார்கள் என்று அமைச்சர் கூறினார்.