மட்டக்களப்பிற்கும் திருகோணமலைக்குமிடையில் புயல் கடக்கலாம்: கடலிலுள்ள மீனவர்களை கரை திரும்ப அறிவுறுத்தல்!

காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்தில் இருந்து நாளை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடற்பிரதேசங்களில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்புமாறு கேட்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கையிலேயே திணைக்களம் இவ்வாறு மீனவர்களை அறிவுறுத்தியுள்ளது.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம் தாழமுக்கமாக மாறி, இன்று பிற்பகல் ஒரு மணியளவில் திருகோணமலையில் இருந்து தென்கிழக்குத் திசையில் 750 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது. இந்த மண்டலம் அடுத்துவரும் சில மணித்தியாலங்களில் புயலாக மாறக்கூடும். இது மேற்குத் திசையில் நகர்ந்து புதன்கிழமை மாலை மட்டக்களப்புக்கும், முல்லைத்தீவிற்கும் இடையில் கிழக்கு கரையோரத்தில் தரை தட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொகுதியின் காரணமாக, அடுத்து வரும் மூன்று நாட்கள் வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அடிக்கடி மழை பெய்யலாம். இடி முழக்கத்துடன் மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது. காற்றின் வேகம் சடுதியாக அதிகரித்து கடல் கொந்தளிக்கலாம். காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் இரண்டு முதல் மூன்று மீற்றர் அலைகள் எழுந்து, கரைக்கு அப்பால் வரக்கூடும்

இந்தத் தொகுதியின் காரணமாக, அடுத்து வரும் மூன்று நாட்கள் வடக்கு கிழக்கு கடற்பரப்பில் அடிக்கடி மழை பெய்யலாம். இடி முழக்கத்துடன் மழை பெய்யும் சாத்தியமும் உள்ளது. காற்றின் வேகம் சடுதியாக அதிகரித்து கடல் கொந்தளிக்கலாம். காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் இரண்டு முதல் மூன்று மீற்றர் அலைகள் எழுந்து, கரையைத் தாண்டி வரலாம். நாட்டை சூழவுள்ள கடல் கொந்தளிப்பானதாகவும் இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here