இன்று 7 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 7 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம், மொத்த உயிரிழப்பு 116 ஆக உயர்ந்தது.

மரணித்தவர்களில் 50, 51, 90 வயதுடைய மூன்று பெண்களும், 48, 73,70, 78 வயதுடைய நான்கு ஆண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணித்தவர்களின் விவரங்கள் பின்வருமாறு,

01. கொழும்பு 02 இல் வசிக்கும் 50 வயது பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணமானார். மாரடைப்பு மற்றும் கோவிட் -19 தொடர்பான நிமோனியாவினால் மரணித்தார்.

02. கோதத்துவவைச் சேர்ந்த 48 வயது ஆண் ஒருவர் அவரது வீட்டில் மரணித்தார். மரணத்துக்கான காரணம் கோவிட் -19 தொடர்பான நிமோனியா மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் என அறிவிக்கப்பட்டது.

03. மொரட்டுவாவைச் சேர்ந்த 73 வயது ஆண் ஒருவர் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது மரணித்தார். மரணத்துக்கான காரணம் கோவிட் -19 தொடர்பான நிமோனியாவாகும்.

04. சிலாபத்தை சேர்ந்த 70 வயது ஆண், சிலாபம் ஆதார மருத்துவமனையில் மரணித்தார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நிமோனியா அதிகரிப்பு.

05. அக்குரசவில் வசிக்கும் 51 வயது பெண் ஹோமாகம மருத்துவமனையில் மரணித்தார். மரணத்துக்கான காரணம் கோவிட் -19 தொடர்பான நிமோனியா மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் என அடையாளம் காணப்பட்டது.

06. கொழும்பு 13 ஐச் சேர்ந்த 90 வயதான ஒரு பெண்ணும் கொழும்பின் தேசிய மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு ஹோமாகம மருத்துவமனையில் மரணித்தார். மரணத்துக்கான காரணம் கோவிட் -19 தொடர்பான நிமோனியா.

07. மருதானையில் வசிக்கும் 78 வயதான ஆண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிந்தார். கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக நுரையீரல் செயலிழப்பு மரணத்திற்கான காரணம்என  தீர்ப்பளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here