வவு. நகரசபை UPDATE: டீல் ஓகே- வவு. தெற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கு?

வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவு நாளை இடம்பெறவுள்ளது. இன்னும் பேரம்பேசல்கள், இழுபறிகள் தீர்ந்தபாடாக இல்லை. ஆட்சியை பிடிப்பதில் உள்ள இழுபறி நிலைமைகள் தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ் பக்கம் உள்வீட்டு தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தது. இன்று காலை வரையான தகவல்களை இப்பொழுது பதிவேற்றுகிறோம்.

சிவசக்தி ஆனந்தன் தரப்புடன் தமிழரசுக்கட்சி சார்பாக வடமாகாணசபை உறுப்பினர் .சத்தியலிங்கம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார். ஏற்கனவே நாம் குறிப்பிட்டதை போல, சிவசக்தி ஆனந்தன் நேரடியாக இந்த பேச்சில் இன்னும் கலந்துகொள்ளவில்லை. தேர்ட் பார்ட்டி ஆட்களின் மூலமே பேச்சுக்களை நடத்தி வருகிறார்.

இதுவரைவவுனியாவில் ஒரு தவிசாளர், ஒரு பிரதி தவிசாளர் என்ற நிபந்தனைகளை வைத்து வந்த சிவசக்தி ஆனந்தன் தரப்பு, நேற்றிரவு சிறிது விட்டுக்கொடுப்புடன் கூடிய தெளிவான முடிவொன்றை அறிவித்துள்ளனர். வவுனியா தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் பதவி தமக்கு தரப்பட வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

வவுனியா தெற்கு பிரதேசசபையின் தவிசாளர் பதவியை புளொட், ரெலோவும் தலா இரண்டு வருடங்களாக பகிர்ந்துள்ளன. அந்த சபையையே சிவசக்தி ஆனந்தன் குறிவைத்துள்ளார்.

இந்த செய்தி எழுதப்படும் போது -காலை 11.00 மணி- இது குறித்த பேச்சு ஒன்று நடந்துள்ளது. இந்த பேச்சில் இடைத்தரகர்களாக செயற்படும் அபிவிருத்தி அதிகார சபையின் வவுனியா மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் கெங்காதரன், வர்த்தக சங்கத்தின் செயலாளர் கோ.ஸ்ரீஸ்கந்தராஜா, வர்த்தக சங்கத்தின் பொருளாளர் புஸ் என அழைக்கப்படும் மா.கதிர்காமராஜா, வர்த்தக சங்கத்தின் உறுப்பினர் க.ஸ்ரீசங்கர், தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் உள்ளிட்டவர்களுடன், தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த பேச்சில் கலந்து கொண்டுள்ளனர்.

எனினும், சிவசக்தி ஆனந்தன் தரப்பு நேரடியாக இந்த பேச்சில் கலந்துகொள்ளாததால் .தே.கூட்டமைப்பிற்குள் சிறிய குழப்பம் நிலவுகிறது. கூட்டமைப்பின் தலைவர்கள் மூவரையும் இன்று மாலை வவுனியா வருமாறு .சத்தியலிங்கம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்தபடியிருக்கிறார். எனினும், சிவசக்தி ஆனந்தனின் தெளிவான நிலைப்பாடு தெரியாமல் போவதில் கட்சி தலைவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ஈ.பி.டி.பியுடன் பேச்சு நடத்தும் திட்டமொன்று நேற்று தமிழரசுக்கட்சி தலைமையிடம் இருந்தது. ஆனால், நேற்றிரவே அதற்கு கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதனால், வவுனியா தெற்கை ஈ.பி.ஆர்.எல்.எவ் இடம் வழங்கி, வவுனியா நகரத்தை தமிழரசுக்கட்சி கைப்பற்றுமென தெரிகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here