புதிய நீதிபதிகள் நியமனத்தில் சர்ச்சை!

20 வது திருத்தத்தின் அடிப்படையில் விரிவாக்கப்படவுள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வெற்றிடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க அண்மையில் வழங்கப்பட்ட அங்கீகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதவி உயர்வுகளில் நீதிபதிகளின் மூப்பு தன்மை புறக்கணிக்கப்பட்டதாகவும், பிரதம நீதியரசரால் பரிந்துரைக்கப்படாத பெயர்களும் இறுதிப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் மத்தியில் திருப்தி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 வது திருத்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் குறித்த நியமனங்களை வழங்குவதற்கான முழு அதிகாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதற்கான பரிந்துரைகளை வழங்க அரசியலமைப்பு சபைக்கு பதிலாக புதிதாக நிறுவப்பட்ட நாடாளுமன்ற சபை ஆறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் பெயர்களை பரிந்துரைத்துள்ளது. பிரதம நீதியரசர் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரியவின் அவதானிப்புடன் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு வெளியான பின்னர் நீதிபதிகள் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்படாத சில பெயர்களும் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here