வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற 500 பேர் வரை தனிமைப்படுத்தல்!

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, அங்கூருவெல்ல பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தனியார் வைத்தியசாலையில் தினமும் 100-150 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து சென்றுள்ளார்கள்.

மருத்துவரும் அவரது மனைவியும் 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். நேற்று (27) பெறப்பட்ட முடிவுகளின்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், மருத்துவர் நேற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். தனிநபர் இடைவெளியையும் பேணாமல் அவர் சிகிச்சையை மேற்கொண்டதாக சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அவரிடம் சிகிச்சை பெற்ற 500 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற கொட்டியாகும்புர, புலத்கோஹுபிட்டி, ருவன்வெல்ல, கலபிதமட மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த எவரும் வந்திருந்தால், ருவன்வெல்ல பகுதி சுகாதார அதிகாரி பிரிவுஈ கிராமசேவகர்கள், பொது சுகாதார ஆய்வாளர்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here