அடர்ந்த காட்டில் புலிகளின் ஆயுதத் தொழிற்சாலை… இராணுவத்திடம் சிக்கிய 2 இளைஞர்கள்: நடந்தது என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட குரவில் பகுதியில் நேற்றிரவு (27) இரண்டு இளைஞர்கள் 200 கிராம் TNT வெடிமருத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்

24 மற்றும் 25 வயதுடைய குறித்த இரண்டு சந்தேக நபர்களிடமும் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர், இருவரும் இன்று (28) காலை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் ப.சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்பலிகளின் ஆயுத தொழிற்சாலை ஒன்று இயங்கியது. அந்த இடத்தில் நிலத்தை அகழ்ந்து வெடிமருந்து சேகரித்துக் கொண்டிருந்த போது, சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் இருவரையும் கைது செய்தனர். மேலும் இரண்டு இளைஞர்கள் தப்பியோடி விட்டனர்.

கைதான இரண்டு இளைஞர்களிடமும் இருந்து 200 கிராம் TNT வெடிமருத்துகள் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு பகுதியை சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இரு இளைஞர்கள் என அறியமுடிகிறது.

கைதானவர்களில், ஒருவர் ஏற்கனவே புதுக்குடியிருப்பு பொலிசாரால் கடந்த வருடம் 52 கிலோகிராம் TNT வெடி மருந்துடன் கைது செய்யப்பட்ட நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் அகழ்ந்து எடுக்கும் பகுதியில் விடுதலைப் புலிகளின் ஆயுதத்தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது. இவர்கள் தொடர்ந்து அங்கு அகழ்ந்து வெடிமருந்து மீட்பதால் அஙகு மேலும் வெடிமருந்துகள் இருக்கலாமென்ற சந்தேகத்தில், நீதிமன்ற அனுமதியுடன் அந்த பகுதியை அகழ்ந்து சோதனையிட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here