வடகொரியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரிகட்டும் வகையில் 2 அதிகாரிகளிற்கு, அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் அன் மரணதண்டனை விதித்துள்ளார்.
பங்குச்சந்தை வீழ்ச்சிக்கு காரணமாக இருந்ததாகக் கூறி உயர் அந்தஸ்து கொண்ட ஒருவருக்கு தூக்கு தண்டனையை கிம் ஜாங் அன் அரசு நிறைவேற்றியுள்ளது. அதேபோல், கொரோனா கட்டுப்பாட்டு சுங்க விதிகளை மதிக்காமல் வெளிநாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், வடகொரிய கடலில் மீன்பிடிக்க தடை விதித்தும், தலைநகர் பியோங்யாங் நகரில் பொது முடக்கத்தை அமல்படுத்தியும் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தகவல்களை தென்கொரியாவின் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேபோல், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடனுன் இணக்கமாக நடந்து கொள்ள கிம் ஜாங் ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் கூறுகின்றன.