நீண்டகால சிறைக்கைதிகளிற்கு மன்னிப்பளிக்க பரிசீலனை!

இலங்கை சிறைகளில் அதிகளவானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சிறைச்சாலை தலைமையகம் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அல்லது ஆயுள் தண்டனைக்கு மாற்றவும் சிறைத் துறை முன்மொழிந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல், பாதாள உலகக் குழுவுடன் தொடர்புடைய குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களிற்கு மன்னிப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here