பளை விபத்தை தொடர்ந்து பரவிய வதந்தி: பளை வைத்தியசாலையில் வழக்கமான செயற்பாடு!

ஓமானிலிருந்து நாடு திரும்பிய பயணிகளை  தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு
அழைத்துச் சென்ற போது பளையில் விபத்துக்குள்ளான பேரூந்தில்
பயணித்தவர்களுக்கு ஓமானில் இரண்டு பிசிஆர் பரிசோதனைகளும்  மற்றும் இலங்கை விமான நிலையத்தில் ஒரு பிசிஆர் பரிசோதனையும் மேற்கொண்டத்தில் அவர்கள் எவருக்கும் தொற்றில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  காயப்பட்ட அவர்களை உடனடியாக பளை வைத்தியசாலைக்கு
எடுத்துச் சென்றவர்கள், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்
பணிப்பாளர், பளை வைத்தியசாலை பணியாளர்கள் ஆகியோர்
தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்து.

ஆனால் அது உண்மைக்கு புறம்பானது. பளை வைத்தியசாலையின்  வழமையான சேவைகள் அனைத்தும் வழமை போல் நடைபெறுகிறது என்பதோடு அதிகாரிகள் எவரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் சுகாதார  திணைக்கள அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here