நிர்வாகத்திற்கு தகுதியற்றவர் என அறிக்கையிடப்பட்டவர் வாகரை பிரதேசசெயலாளரானார்: அரசியல் புகுந்து விளையாடியது!

வாகரை பிரதேச செயலாளராக எஸ்.கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கடமைகள் வழங்கப்படாது, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இணைப்பில் இருந்த கரனின் நீண்ட அஞ்ஞானவாசத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது அரசியல் செல்வாக்கின் மூலம் முடித்து வைத்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் சிறிநேசன் மேற்கொண்ட முயற்சியையடுத்து, அவருக்கான இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாவிதன்வெளி பிரதேச செயலாளராக கடமையாற்றியவர். அப்போது அங்கு பெருமளவு மோசடிகளில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து, விசாரணைகள் நடந்தன. அதில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன.

அவர் பிரதேச செயலக நிர்வாகத்திற்கு உகந்தவர் அல்ல என்றும், வேறு திணைக்களங்களிற்கு மாற்றும்படியும் அந்த விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு அடுத்து ஓட்டமாவடி பிரதேசசெயலாளராக அவர் நியமிக்கப்பட ஏற்கனவே ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அல்விஸ் அதை நிராகரித்தார். அவர் பிரதேசசெயலக நிர்வாகத்திற்கு உகந்தவர் அல்ல என்ற பரிந்துரையை அப்போது அல்விஸ் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிர்வாகத்திற்கு பொருத்தமற்றவரென விசாரணைக்குழு பரிந்துரைத்தவரை, ஒரு வருடம் சும்மா உட்கார வைத்துவிட்டு, மீண்டும் முக்கிய பதவி வழங்கப்பட்ட மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாவிதன்வெளி பிரதேசசெயலாளராக கடமையாற்றிய போது, முஸ்லிம் அமைச்சர்களுடன் இணைந்தே அவர் காணி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பெருமளவு அரச காணிகள் இருக்கும் நிலையில், அவற்றின் எதிர்காலம் சந்தேகத்திற்கிடமானதாக மாறியுள்ளது.

நாவிதன்வெளி பிரதேசசெயலாளராக கடமையாற்றிய போது, எஸ்.கரன் சிக்கலில் சிக்கிய மோசடி விவகாரங்கள் தொடர்பாக முழுமையான ஆதாரங்களை தமிழ்பக்கம் நாளை பதிவிடும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here