வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலெழுந்தவாரியாக இன்று வெள்ளிக்கிழமை 152 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்தவகையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் ஓட்டமாவடி பொதுச் சந்தை என்பவற்றில் மேலெழுந்தவாரியாக 93 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.
அத்தோடு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.நஜீப்கான் தலைமையில் மேலெழுந்தவாரியாக 59 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றது.
இதன்போது மீன் வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், பழங்கள் வியாபாரிகள், இறைச்சி வியாபாரிகள், சில்லறைக்கடை வியாபாரிகள், தம்புள்ளை பகுதிக்கு மரக்கறி கொள்வனவு செய்து வந்த வியாபாரிகள், பொருட்கள் கொள்வனவு செய்த மக்கள், சமூகமட்ட தலைவர்கள் ஆகியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.