திருகோணமலை விபத்தில் இருவர் படுகாயம்!

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை- ஹொரவப்பொத்தான வீதியின், துவரங்காடு சந்தியில் இன்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றத. டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.

வேகமாக வந்த முச்சக்கர வண்டி, கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் வாகனத்தில் மோதியது.

முச்சக்கர வண்டியில் பயணித்த மட்டிக்களி, ராஜவரோதய சதுக்கம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் ஜதுர்சன் (19), உவர்மலை மத்திய வீதியை சேர்ந்த ஜீவராசா கலைநேசன் (24) ஆகிய இருவரும் காயமடைந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here