35வது பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றார் சந்தன விக்ரமரத்ன!

இலங்கையின் 35 வது பொலிஸ்மா அதிபரரக நியமிக்கப்பட்ட சந்தன விக்கிரமரத்ன இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 28, 2019 முதல் ஒரு வருடத்திற்கும் மேலாக பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட இவரின் பெயர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் பொலிஸ்மா அதிபராக பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் அது பாராளுமன்ற குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சி.டி. விக்ரமரத்ன 1986 ஆம் ஆண்டில் பொலிஸ் சேவையில் இணைந்தார்.

அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றவர். பேட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை டிப்ளோமா பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here