முல்லைத்தீவில் தடக்கி விடுந்தால், இராணுவத்தின் காலடியிலேயே விழ வேண்டும்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009 க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு கடந்த வருடங்களிலும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம் பெற்றன.

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ளனர்.

இதை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதேவேளை பரந்தன்-புதுக்குடியிருப்பு வீதியிலும் முழத்திற்கு முழம் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here