சுவீடன் இளவரசர், இளவரசிக்கு கொரோனா!

சுவீடனின் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஹெல்கிஸ்ட் ஆகியோர் கொரோனா தொற்றிற்கு உள்ளானதாக அறிவித்துள்ளனர்.

தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனிமைப்பட்டுள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததும், ​​இளவரசி சோபியா ஒரு மருத்துவமனையில் தன்னார்வளராக தொண்டு செய்தார்.

ராஜா மற்றும் ராணி, பிள்ளைகள் விக்டோரியா மற்றும் டானியல் ஆகியோர் மீளவும் பரிசோதிக்கப்பட உள்ளனர். பிள்ளைகள் யாரும் இதுவரை எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here