இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை வருகிறார்!

நாளை வெள்ளிக்கிழமை கொழம்பில் இடம்பெறும் இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிற்கிடையே முத்தரப்பு கலந்துரையாடல்களுக்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் கொழும்பு வருகிறார்.

மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமது தீதியும் கொழும்புக்கு விஜயம் செய்கிறார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட தரப்பினருடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறும். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டிலேயே மூன்று நாடுகளும் கலந்து கொள்கின்றன.

அஜித் டோவல் இந்த ஆண்டு இலங்கைக்கு இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் இலங்கை வந்திருந்தார். ஜனாதிபதி கோட்டாபய தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை வந்தவர், கோட்டாவின் புதுடில்லி விஜயம் – மற்றும் இராணுவ உறவுகளை வலுப்படுத்துவது , கடன் பொறியை எதிர்கொள்வது பற்றிய விவாதங்களை நடத்தினார்.

நாளை நடக்கும் உயர்மட்ட கலந்துரையாடின் பின்னர், அஜித் டோவல் இரு தரப்புடனும் தனித்தனி சந்திப்பில் கலந்து கொள்வாரா என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மூன்று நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்ட கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் புதுடில்லியில் நடைபெற்றிருந்தது. ஆறு ஆண்டுகளின் பின்னர் தற்போது, இந்த மாநாட்டில் இரண்டு நாடுகளும் பங்கு கொள்கின்றன.

கொழும்புக்கு உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரிகள் அடுத்தடுத்து வந்ததன்  தொடர்ச்சியாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் வருகை அமைந்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாத தொடக்கத்தில் உயர் மட்ட சீனக் குழுவினர் இலங்கை வந்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோ இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here