நிலவும் அசாதாரண சூழலில் வடமாகாணத்தில் பலத்த புயல் அடிக்கும் அபாயம் ஏற்பட்டு மின் கம்பிகள் அறுந்து விழும் சந்தர்ப்பங்களில் துரித சீரமைக்கும் பணியை இலங்கை மின்சாரசபை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமு.
வடக்கு பிரதேசங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால், உடனடியாக எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என்று வடமாகாண மின்சார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் 0212024444 என்ற இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.
அதனை விட யாழ்ப்பாணம் 0212222609, கோண்டாவில் 0212222498, சுன்னாகம் 0212220301, சாவகச்சேரி 0212270040, பருத்தித்துறை 0212263257, வட்டுக்கோட்டை 021225855, வேலணை 0212211525, வவுனியா 0242222379, மன்னார் 0232222150, கிளிநொச்சி 0212285124, மாங்குளம் 0212060036, முல்லைத்தீவு 0212290020, மடு 0232051565 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.