எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற மீனவர் உயிரிழந்த பரிதாபம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற திருகோணமலை மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (25) அதிகாலை இந்த சோக சம்பவம் நடந்தது.

திருகோணமலையில் திருக்கடலூர் பகுதியில் இன்று காலை 5.45 மணியளவில் தொழிலுக்கு சென்ற மீனவர்களின் படகு, கடற்சீற்றம் காரணமாக கவிழ்ந்துள்ளது. இதில் படகிலிருந்த ஒருவர் மூழ்கினார். ஏனைய மூவரும் நீந்திக்கரை சேர்ந்தனர்.

மூழ்கிய மீனவரின் உடலும் மீட்கப்பட்டது.

திருக் கடலூர், ஹர்தாஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த இங்கே ஏ.ஜான் (45) என்பவரே உயிரிழந்தார்.

உயிரிழந்த மீனவரின் சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here