தீவிர புயலானது ‘நிவர்’; நள்ளிரவு கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்றும், இதனால் மிக பலத்த காற்றுடன், கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், ஏற்கெனவே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், புயலின் தற்போதைய நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

நிவர் புயலானது தற்போது கடலூருக்கு கிழக்கு தென்கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 300 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென் கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here