உரிய பாதுகாப்பு வசதிகளில்லை: கொரோனா வைத்தியசாலை தாதியர்கள் போராட்டம்!

தமக்கு உரிய வசதிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்து மாத்தறை மாவட்ட கொரோனா சிகிச்சை வைத்தியசாலையின் தாதியர்கள் நேற்று அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது கடமையை செய்ய உரிய வசதிகள் செய்து தரப்படவில்லையென தாதியர்கள் குற்றம்சாட்டினர்.

வைத்தியசாலையின் வெளிப்புறமாக பாதாதைகளை தாங்கியபடி தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமக்கு உரிய போக்குவரத்து, சுகாதாரம், உணவு, உறைவிடம் வசதி கிடைக்கவில்லை என்றும்,வைத்தியசாலையில் கடமைக்கு போதிய தாதியர்கள் இல்லையென்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 200 கொரோனா நோயாளிகள் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here