மாவீரர்தின ஒழுங்கமைப்பு பற்றிய இறுதி அறிவிப்பு நாளை!

தமிழ் தேசிய கட்சிகளின் சந்திப்பு இன்று இடம்பெறவில்லை. நாளை மாலை வரை சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

மாவீரர்தின அஞ்சலி குறித்து தமிழ் கட்சிகள் இன்று கூடி ஆராய திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், யாழ் நீதிவான் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வழங்கப்படவில்லை.

நாளை காலை வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படலாம் என்பதால் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை யாழ் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர், மாலை 4 மணிக்கு கூட்டம் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here